• A
  • Tamil
  • Aadharavaai udanirundhu Lyrics / ஆதரவாய் உடனிருந்து

    Aadharavaai udanirundhu Lyrics | ஆதரவாய் உடனிருந்து | Tamil Christian Song Lyrics

    ஆதரவாய் உடனிருந்து அதிசயம் காண செய்தீர்
    ஆறுதலாய் உடனிருந்து அற்புதம் நடக்க செய்தீர் – ( 2 )
    எண்ணி முடியாத அதிசயம் செய்தீரே
    எண்ணி முடியாத அற்புதம் செய்தீரே – ( 2 )

    காரிருளில் நான் நடந்த போதெல்லாம்
    கர்த்தாவே உம் கரம் தாங்கினதே
    கண்ணீரின் பாதையில் நடந்த போதெல்லாம் ( போதும் )
    கரம் பிடித் தென்னை தூக்கினீரே – ( 2 )
    நான் நடக்க முடியாத பாதையிலும்
    அதிசயமாய் என்னை நடத்தினிரே – ( 2 )

    நம்பின மனிதர்கள் மாறினாலும்
    யாக்கோபின் தேவன் என் அரணானீர்
    நட்டாற்றில் நான் தவித்தபோதும்
    நல்ல மேய்ப்பன் என் கூட வந்தீர் – ( 2 )
    அறியாத வழியில் என்னை நடத்தி
    அதிசயமாய் நடக்க வைத்தீர் – ( 2 )

    அக்கினி சூளையில் நடந்த போதும்
    சேதமின்றி என்னை பாதுகாத்தீர்
    ஆபத்து என்னை சூழ்ந்த போதும்
    ஆவியானவர் கூட நின்றீர் – ( 2 )
    என் வாழ்நாளெல்லாம் நான் மகிழும்படி
    உம் கிருபை என்னில் காண செய்தீர் – ( 2 )

    Aadharavaai udanirundhu Athisayam Kaana seitheer
    Aaruthalaai Udanirunthu Arputham Nadakka seitheer-2
    Enni Mudiyatha Athisayam seitheerae
    Enni Mudiyatha Arputham seitheerae-2

    Kaarirulil Naan nadantha pothellaam
    Karthavae Um karam Thaanginathae
    Kanneerin Paathaiyil Nadantha pothellaam (pothum)
    Karam pidithennai Thookkineerae-2
    Naan Nadakka mudiyatha Paathaiyilum
    Athisayamaai Ennai nadathineerae-2

    Nambina Manithargal Maarinaalum
    yahobin devan en Aranaaneer
    Nattaatril naan Thavitha pothum
    Nallla Meippan En Kooda vantheer-2
    Ariyatha Vazhiyil Ennai nadathi
    Athisayamaai Nadakka vaitheer-2

    Akkini Soolaiyil Nadantha pothum
    Seathamintri Ennai paathukaatheer
    Aabaththu Ennai soolntha pothum
    Aaviyanavar Kooda nintreer-2
    En Vaalnaellaam naan Magilumpadi
    Um Kirubai Ennail Kaana seitheer-2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins